சென்னை : அரசு டாக்டர்கள் இடம் மாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடு டந்துள்ளதாகக் கூறி, சென்னை மாவட்ட டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை துறையில் இடம் மாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்துள்ளதாக, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட கிளையின் சார்பில் போராட்டம் நடந்தது. மருத்துவமனை வளாகத்தில் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தில், சங்கத்தின் செயலர் டாக்டர் காசி உட்பட 150க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.போராட்டம் குறித்து சங்கத் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: கவுன்சிலிங்கில் நடந்துள்ள முறைகேடுகளை நீக்கி, "சீனியாரிட்டி' அடிப்படையில் பொறுப்புகள் மற்றும் இடம் மாறுதல்களை செய்து, தகுதி உடையவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தமிழக முதல்வர் தலையிட்டு, எங்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். எங்கள் கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டால், வரும் 25ம் தேதி கரூரில் நடக்கும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
TNGDA CHENNAI site is not updating the information regularly but other site like salem is updating very fast.even we r not receiving any assocition activities by sms. previously we received sms regarding associa tion activity.we are wondering what happens to regular promotion counselling for asst professor to associate professor. next batch will also join if this happens in this tortoise speed.we want the association to represent this at the earliest,.
PLEASE CLOSE THE WEBSITE. WHAT IS THE USE OF THIS IDLE THING. (THE LAST MESSAGE DATED ON JULY 21 st).
WE ARE HAVING INFORMATION FROM OTHER DISTRICT TNGDA SITES. KINDLY CONSIDER THIS REQUEST
Post a Comment