திருவொற்றியூர், ஜூலை 21: மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்திய கலந்தாய்வில் பெறப்பட்ட உத்தரவினை மாற்றியதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தர்ணா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தர்ணா போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைமை நிலைய செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டும் கலந்தாய்வு நடைபெற்றது. ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் வயிற்றுப்பகுதி சிகிச்சை பிரிவில் துறைத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இப்பதவிக்கு வர தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் மனோகரன் என்பவர் விருப்பம் தெரிவித்துள்ளார். பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வில் துறைத் தலைவர் பதவிக்கான பணி உத்தரவும் அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான பொறுப்பினை அவர் ஏற்பதற்கு முன்பே இதே துறைத் தலைவர் பதவிக்கு டாக்டர் யஸ்வந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பணி மூப்பு அடிப்படையில் மனோகரனை விட யஸ்வந்த் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பின்னால் உள்ளார். மேலும் டாக்டர் யஸ்வந்த் கலந்தாய்வில் கலந்து கொள்ளவும் இல்லை. மேலும் டாக்டர் மனோகரனின் மாணவர்தான் டாக்டர் யஸ்வந்த். இப்படி நடைமுறைகளை மீறி சரிப்படுத்தி ஒருவரை துறைத் தலைவராக நியமனம் செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இந்நிலை தொடர்ந்தால் கலந்தாய்வு என்பதே அர்த்தமற்றதாக்கிவிடும்.
இதில் மருத்துவத் துறை உயர்நிலை அளவில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே இதில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு கலந்தாய்வில் அளிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளவே இந்த தர்ணா போராட்டத்தை நடத்துகிறோம் என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
போராட்டத்தில் சங்கத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் எஸ்.காசி, டாக்டர் எஸ்.திருநாவுக்கரசு, டாக்டர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
CML .... உங்கள் குறிப்பு சரிதான் ... நீதிமன்றம் விதி 4 E யை அமல் படுத்த உத்தரவிட்டால் அது 1988 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பொருந்தும் . அதாவது நமது சங்க செயலாளருக்கும் (1993 ) பொருந்தும் ... அதனால் தான் நமது சங்க செயலாளர் விதி 4 E யை 1995 க்கு பிறகு அமல் படுத்தினால் போதும் என DMS அலுவலகத்தை மறைமுகமாக கட்டாயபடுத்தி வருகிறார் . வழக்கு தொடுதவர்களோ / நீதிமன்றமோ இது வரை தரப்பட்ட பதவி உயர்வை பறிக்க வேண்டும் என கூறவில்லை. இவ் வழக்கில் பாதிக்க பட்டவர்கள் நீதிமன்றம் செல்லும் முன் பலமுறை இது பற்றி சங்க தலைவர்களிடம் (& மரு .பொன்னுராஜ் - கடந்த ஒரு வருடமாக ) முறையிட்டுள்ளனர் . சங்க செயலாளர் தனது சுயநலத்திற்காக இந்த வழக்கு '' விதி 4 E & CML தவறுகளை திருத்த '' என்பதை மறைத்து '' GO : 354 க்கு எதிரான வழக்கு " என பொய் பிரசாரம் செய்துவருகிறார் . தனது கீழ் தரமான அரசியல் போன்ற இச் செயல்களுக்கு முன்னால் தலைவர் பிரகாசம் பெயரையும் இல்லுக்கிறார் . இவர் நீதிமன்ற உத்தரவையும் முழுமையாக அமல்படுத்த விடமாட்டார் ( 1988 முதல் ) ...தற்போதைய சங்கதலைவர்கள் சிலர் DMS அலுவலகத்தின் இடை தரகர்களாக பல வேலைகளில் செயல்பட்டு வருவது மிக வேதனையானது .சங்க தலைவர் Dr கனகசபாபதி இதை எல்லாம் கட்டுபடுத்த முடியாமல் தவிக்கிறார் ... இதெல்லாம் தற்போதைய தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் தலைவிதி என்றுதான் கூறவேண்டும் ....
CML வழக்கில் சங்க செயலாளர் ஒரு பெரும் தொகையை அரசு வழகரினருக்கும் , வாதிகள் (Petitioner) வழகரினருக்கும் ( தன சொந்த பணமல்ல ... சங்க பணம் தான்.) சுய லாபத்திற்காக லஞ்சமாக கொடுதிருபதாக தகவல் ! எதற்கு ? 4E யை அமுல்படுத்த விடாமல் செய்வதற்கு ... ஆனால் GO :354 க்கு தடை வராமல் செய்வதற்கு என மாற்றி கூறுகிறார் .( சங்கம் பக்கம் நியாயம் இருந்தால் எதற்கு இவ்வளவு பெருந்தொகை ??)
அய்யா ! தலைவர் கனகசபாபதி அவர்களே ... சங்க பணம் சிலரின் சுயநல செயல்களுக்கு விரயமாவதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா ! இனி எதிர்காலத்தில் வரும் வழக்குகளில் எல்லாம் இது போல் செலவு செய்ய போகிறீர்களா?...
POP 15 Yr re-fitment ( PB3 - GP: 6600)order( For qualified persons lacking Teaching experience 5/2 Yrs as on 23.10.2009 & MBBS/Diploma Candidates )
SAP re-fitment ( PB3 - GP: 6600) order ( For persons completed Teaching experience 3 Yrs as on 23.10.2009)
இந்த இரு ஆணைகள் மூலம் GO :354 ல் கிராமப்புற சேவை காலம் , CML சீனியாரிட்டி , மொத்த பணிகாலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை என்பதும் , நேரடியாக DME ல் பணியில் சேர்ந்தால் மட்டுமே அதிக பலன்களை (MCI ) பெறமுடியும் என்பதும் நிறுபனமாகி உள்ளது.
அதாவது July 2006 ல் பலர் நேரடியாக DME ல் சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்தனர் . 3 1/2 வருடமே மொத்த பணிகாலம் உள்ள இவர்களது (23.10.2009 ல்) சம்பளம் (PB3 . GP : 6600 - i.e Civil Surgeon PAY).இவர்கள் அடுத்த 5 வருடத்தில் PB4 வாங்குவார்கள் (அதாவது 9 1/2 வருட மொத்த பணிகாலத்தில்)....
ஆனால் பல வருடம் DPH / DMS ல் பணி செய்து பின்பு DME க்கு வந்தவர்களின் சம்பளம்(GO:354 படி) பதவி என்ன ??? !!... இனி வரும் காலத்தில் DPHபணி/ Service PG முடித்து DME வருபவர்களின் நிலை / சம்பளம் என்ன??
REPLY ::
அய்யா !
2006 முதல் 2009 வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 3000 பேர்கள் பணியில் சேர்ந்தனர் ...
இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது எந்த பெரிய பதவி உயர்வு வாய்ப்பும் இருக்காது.
ஏனென்றால் இதே சமயத்தில் சுமார் 1000 பேர்கள் நேரடியாக DME பணியில் சேர்ந்துள்ளனர் ... இவர்கள் ஒரு நாள் கூட கிராமபுரத்தில் பணியாற்ற வில்லை . இவர்களில் பலருக்கு இன்னும் CML எண் கூட தரப்படவில்லை ... ஆனால் GO:354 படி பலர் PB3-GP:6600 , Sr.AP - Civil Surgeon PAY பெற தகுயாகின்றனர். இவர்கள் இனி எல்லா பதவிக்கும் முன்னே சென்று கொண்டே இருப்பார் ( Sr.AP --> Associate --> Professor --> Dean/MS --> DME ).
இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது CML சீனியாரிட்டி , மொத்த பனிகாலம் அதிகம் இருந்தாலும் சீனியர்கள் இவர்களுக்கு பின்னால்தான் எல்லா பதவிகளுக்கும் செல்ல வேண்டும் ...
Post a Comment